மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கமல் - ஹாலிவுட்டுடன் கை கோர்க்கிறார்.

கமலின் பேட்டியை தமிழ் பத்தி‌ரிகைகளில் பார்த்து எவ்வளவு நாளாகிறது? தமிழுக்குதான் இந்த பாராமுகம். மலையாளப் பத்தி‌ரிகைகளுக்கு சற்று தாராளமாகவே மனம் திறக்கிறார் கமல்.

சமீபத்தில் இவரது பேட்டி மலையாளப் பத்‌‌திரிகையொன்றில் வெளிவந்தது. பேட்டியின் பிரதான விஷயம், கமலின் அடுத்தப் படம். தற்போது கமல் மன்மதன் அம்பு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது. இதையடுத்து கமல் உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு முன்பு அறிவித்த தலைவன் இருக்கின்றான் படத்தை தொடங்கயிருக்கிறார்.

படத்தை நானே இயக்கு‌கிறே‌ன் என்றும் அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தலைவன் இருக்கின்றானை கமலின் ரா‌ஜ்கமல் பிலிம்ஸுடன் இணைந்து ஹாலிவுட் நிறுவனம் ஒன்று தயா‌ரிக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியைப் பொறுத்து நின்றுபோன மர்மயோகி மீண்டும் தூசு தட்டப்பட வாய்ப்புள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.