மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஸ்ரீகாந்த் - ஆர்யாவுக்குப் பதில்.

3இடியட்ஸ் தமிழ் ‌ரிமேக்கில் யார் யார் நடிக்கது என்பது நேற்றுவரை ஊசலாட்டமாகவே இருந்தது. விஜய், ‌ஜீவா நடிப்பது உறுதியான நிலையில் மூன்றாவது ஹீரோவாக ஆர்யா நடிப்பார் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர்.

ஆனால் திடீர் திருப்பமாக ஆர்யாவுக்குப் பதில் ஸ்ரீகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஆர்யாவின் கால்ஷீட் நிரம்பி வழிவதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும், பாலாவின் அவன் இவன் படத்தில் ஆர்யா பிஸியாக இருப்பதே 3இடியட்ஸில் அவர் நடிக்க மறுத்ததற்கு காரணம் என்கிறார்கள். பாலா படத்துக்காக ஆர்யா தனது ஹேர் ஸ்டைலை மாற்றியிருப்பது இன்னொரு காரணம்.

3இடியட்ஸில் பூமன் இரானி நடித்த பி‌ரின்சிபல் வேடத்தில் சத்யராஜும், க‌ரீனா கபூர் வேடத்தில் இலியானாவும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

வரும் ஐந்தாம் தேதி டெல்லியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.