மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அமெ‌ரிக்காவில் விஜய் ஓய்வு.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விஜய் விரைவில் சந்திப்பார் என்ற காலில்லாத செய்தி ரொம்ப நாளாகவே உலவிக் கொண்டிருக்கிறது.

விஜய் ஜெயலலிதாவை சந்திக்கிறார் என்ற செய்தி கிளம்பி பத்தி‌ரிகையாளர்கள் இரண்டு நாள் முன்பு இரவு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால் கடைசி வரை விஜய் வரவில்லை.

சென்னையில் இந்த கண்ணாமூச்சி நடந்து கொண்டிருந்த போது விஜய் சைலண்டாக அமெ‌ரிக்கா பறந்துவிட்டதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. கலிஃபோர்னியா சென்றிருக்கும் அவர், ஒரு வாரம் ஓய்வு எடுக்கவும் அப்படியே காவலன் படத்தின் ட்ரெய்லரை அமெ‌ரிக்க ரசிகர்கள் முன்பு வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறாராம்.

இதனிடையில் விஜய் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அரவது ரசிகர்கள் கட்சி வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

நடக்கிற காமெடிகளைப் பார்த்தால், இது கலிகாலம் என்பதை கடவுளை நம்பாதவர்களும் நம்பித்தான் ஆக வேண்டும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.