மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> புகை‌ப்பட‌‌த் தொ‌ழி‌ல் வ‌ற்றாம‌ல் வருமான‌ம் தரு‌ம்.

பெ‌ற்ற தா‌ய் சொ‌ல்லை கே‌ட்காதவ‌ர்க‌ளு‌ம் கூட புகை‌ப்பட‌க்கார‌ர்க‌ள் சொ‌ன்னா‌ல் த‌ட்டாம‌ல் கே‌ட்பா‌ர்க‌ள். வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ல்லதோ, கொ‌ட்டதோ அதை ப‌திவு செ‌ய்து தருபவ‌ர்க‌ள் புகை‌ப்பட‌க்கார‌ர்க‌ள்தா‌ன். ந‌ம்மை யா‌ர் எ‌ன்று உண‌ர்‌‌த்துவத‌ற்கு புகை‌ப்பட‌ம் தா‌ன் ஆதரமாக ‌திக‌ழ்‌கி‌ன்றன. வ‌ா‌ழ்‌க்கையோடு ‌பி‌‌‌ண்‌ணி‌ப் பிணை‌ந்து‌வி‌ட்ட புகை‌ப்பட‌‌த் தொ‌ழி‌ல் க‌ற்பனை ச‌க்‌தி ‌மிகு‌ந்தவ‌ர்களு‌க்கு கதவை ‌திற‌ந்து கா‌த்‌‌திரு‌க்‌கிறது.

மு‌க்‌கிய நகர‌ங்க‌ளி‌ல் ம‌‌ட்டு‌மி‌ல்லாம‌ல் ‌ஸ்டூடியோ தொ‌‌ழி‌லை ‌கிராம‌ங்க‌ளிலு‌ம் செ‌ய்ய முடியு‌ம். 30 ஆ‌ண்டுகளு‌க்கு மேலாக இ‌த்துறை‌யி‌ல் இரு‌ப்போ‌ர் த‌ங்களை வள‌ர்‌த்து‌வி‌ட்ட தொ‌ழிலையே வா‌ழ்‌க்கையாக எடு‌த்து‌ச் செ‌‌ய்‌கி‌ன்றன‌ர். 50 வயது வரை வ‌ற்றாம‌ல் வருமான‌ம் தரு‌வதாக உ‌ள்ளது புகை‌ப்பட‌‌த் தொ‌ழி‌ல்.

‌‌ஸ்டூடியோ ஆர‌ம்‌பி‌க்க ‌சி‌றிய இடமு‌ம், குறு‌கிய கால ப‌யி‌ற்‌சியு‌‌ம் இரு‌ந்தாலே போது‌ம். ஆ‌ர்வ‌த்துட‌ன் க‌ற்கு‌ம் 6 மாத ப‌யி‌ற்‌‌‌சிய‌ி‌ன் முடி‌வி‌ல் ‌விரு‌ம்‌பியபடி இ‌த்துறை‌யி‌ல் எ‌ந்தவொரு தொ‌ழிலையு‌ம் தே‌ர்‌ந்தெடு‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம். வாடி‌க்கையாள‌ர்க‌ளி‌ன் தேவை‌க்கு ஈடுகொடு‌த்து ‌அவரை திரு‌ப்‌திபடு‌த்து‌ம் படியான வேக‌ம் இ‌த்தொ‌ழிலு‌க்கு தேவை. ஒ‌ளி‌ப்பட தொ‌ழி‌லி‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் முத‌லீ‌ட்டைபோ‌ல் குறை‌ந்தப‌ட்ச‌ம் 20 சத‌‌‌வீத இலாப‌த்தை பெற முடியு‌ம்.

‌ஸ்டுடியோ வை‌ப்பத‌ற்கு அமை‌ப்பு, பகு‌தியை பொறு‌த்து ஒரு ல‌ட்ச ரூபா‌ய் முத‌லீடு இரு‌ந்தாலே போது‌ம். தொ‌ழி‌லி‌ன் வேக‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ப அடு‌த்தடு‌த்து முத‌லீடுகளை மே‌ற்கொ‌ள்ள முடியு‌ம். முத‌லீடு பெருக பெருக வருமானமு‌ம் உயரு‌ம். இத‌ற்கு வ‌ங்‌கி‌க் கட‌ன்களு‌ம் ‌கிடை‌க்‌கி‌ன்றன.

எ‌னினு‌ம் ‌பிற‌ரிட‌ம் தொ‌ழி‌ல் க‌‌ற்றா‌ல் அவருடைய சாயலு‌ம், அணுகுமுறையு‌ம் ஒ‌ட்டி‌க்கொ‌ள்வது இய‌ல்பாகு‌ம். தொ‌ழி‌ல்நு‌ட்ப ‌‌ரீ‌தியாக இ‌த்துறை அடை‌ந்‌திரு‌க்கு‌ம் மு‌ன்னே‌ற்ற‌த்தை குறு‌கிய கால‌த்‌தி‌ற்கு‌ள் அ‌றி‌ந்து கொ‌ள்ள உதவு‌கி‌ன்றன ப‌யி‌ற்‌சி ‌நிலைய‌ங்க‌ள். இவை உயர‌ங்களை எ‌ட்ட ‌கிடை‌த்து‌ள்ள எ‌ளிய வா‌ய்‌ப்புகளாக தெ‌ரி‌கி‌ன்றன. கா‌ன்‌ஸ்‌ட‌பி‌ள் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து தொட‌ங்குவதை ‌விட ஐ.‌பி.எ‌‌ஸ் படி‌‌த்து ஏ.‌சி.யாக ப‌ணியை தொட‌‌ங்குவது ந‌ல்ல அடி‌த்தள‌ம் எ‌ன்பது போ‌ன்றது இதுவாகு‌ம்.

ஒ‌ளி‌ப்பட‌த் தொ‌ழி‌ல் பல ‌கிளைகளுட‌ன் ‌வி‌ரி‌ந்து ‌கிட‌க்‌‌‌கிறது. இ‌தி‌‌ல் இற‌‌ங்கு‌ம் மு‌ன்பு த‌ங்க‌ளி‌ன் ஆ‌ர்வ‌ம் ‌விள‌ம்பர‌த்துறையா, ‌‌‌சி‌னிமா‌வா, சொ‌ந்த ‌ஸ்டூடியோவா எ‌ன்பதை உண‌ர்வது அ‌வ‌சிய‌ம். துறையை தே‌ர்‌ந்தெடு‌த்து அ‌தி‌ல் ம‌ட்டு‌ம் ‌சிற‌ப்பு ப‌யி‌ற்‌சி பெறுவது இல‌க்கை எ‌ளிதா‌க்கு‌ம் எ‌ன்பது இளைய தலைமுறை‌யி‌ன் ந‌ம்ப‌ி‌க்கை.

பா‌ஸ்போ‌ட் அளவு பட‌ம் எடு‌ப்பது, ‌திருமண கவரே‌‌ஜ் எ‌ன்று ம‌ட்டுமே இரு‌ந்தது புகை‌ப்பட‌த் தொ‌ழி‌ல். ஆனா‌ல் குள‌த்த‌ி‌ல் எ‌றிய‌ப்ப‌ட்ட தொ‌ழி‌ல் நு‌ட்ப‌ க‌‌‌ல்போ‌ல் பல வ‌ட்ட‌ங்க‌ள் ‌வி‌ரி‌ந்து வள‌ர்‌ச்‌சி அடை‌ந்து‌வி‌ட்டது. இதன‌ா‌ல் ஆ‌ர்வமு‌ள்ள இளைஞ‌ர்களு‌க்கான தேவை அ‌திக‌ம் கொ‌ண்ட தொ‌ழிலாக இது மா‌றியு‌ள்ளது.

புகை‌ப்பட‌‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ன் அ‌ங்கமாகவே மா‌றி‌வி‌ட்ட ‌நிலை‌யி‌ல் அத‌ன் வருமான வா‌ய்‌ப்புகளு‌ம் பல ‌கிளைகளாக ‌‌பி‌ரி‌ந்து நி‌‌ற்‌கி‌ன்றன. புகை‌‌ப்பட‌த்துட‌ன் தொட‌ர்புடைய ல‌ே‌மிசே‌ன், ‌பிரே‌ம்க‌ள், ‌ஆ‌ல்ப‌ம், வி‌‌சி‌ட்டி‌ங் கா‌ர்டு எ‌ன்று தொட‌ர்பு தொ‌ழி‌ல்க‌ள் ஏராள‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் அ‌ரி‌சி‌யி‌‌ல் பெய‌ர் எழு‌தி இரு‌ப்பதாக ‌சில‌ர் கூறுவது ‌உ‌ண்டு. இ‌ங்கே த‌‌ட்டி‌ல் பட‌த்தையே பொ‌றி‌த்து‌ நமதா‌க்‌கி கொ‌ள்ள முடி‌கிறது. பே‌ப்ப‌ரி‌ல் ம‌ட்டும‌ல்லாம‌‌ல் ‌கா‌க், பிளே‌ட் எ‌ன்று பொரு‌ட்க‌ள் எ‌ன்று ‌விரு‌ம்பு‌ம் பொரு‌ட்க‌ள் மே‌ல் ‌பி‌ரி‌ண்‌ட் போடு‌ம் தொ‌ழி‌ல் நு‌ட்பமு‌ம் உ‌ள்ளது. இறக்கும‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்ட எ‌ந்‌திர‌ங்க‌ள் வ‌ந்து‌வி‌ட்ட ‌நிலை‌யி‌ல்‌ ‌சி‌றிய பட‌ம் முத‌ல் ‌பிரமா‌ண்ட பட‌‌ங்க‌ள் வரை ‌பி‌ரி‌ண்‌ட் போட‌ப்படு‌கி‌ன்றன.

புகை‌ப்பட தொ‌ழிலு‌க்கு அடி‌ப்படை கே‌மிரா எ‌ன்றாலு‌ம் பு‌திய டி‌ஜி‌ட்ட‌ல் தொ‌‌ழி‌‌ல்நு‌ட்ப‌ம் அதை ப‌ல்வேறு தள‌ங்களு‌க்கு எடு‌த்து‌ச் செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கிறது. குறை‌ந்தப‌ட்ச வருமான‌ம் ‌நி‌ச்ச‌ம் எ‌ன்பத‌ா‌ல் ஆ‌ர்வ‌த்தையு‌ம், ‌திறமையையு‌ம் கல‌ந்து உழை‌த்தா‌ல் பல ல‌ட்ச‌ம் வருமான‌ம் தருவதாக உ‌ள்ளது புகை‌ப்பட‌‌த் தொ‌ழி‌ல்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.