மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கார்த்தி - கௌதம் மேனன் படத்தில்?

கௌதம், சூர்யா கூட்டணி என்றால் ரசிகனுக்கும் நரம்பு புடைக்கும். காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஏற்படுத்திய மாயம் இது.

அ‌‌ஜீத்தை வைத்து கௌதம் இயக்குவதாக இருந்த துப்பறியும் ஆனந்த் படத்தை சூர்யாவை வைத்து இயக்குவதாக கூறியிருந்தார் கௌதம். ஆனால் அவரது ஆசை நிறைவேறும்போல் தெ‌ரியவில்லை.

7ஆம் அறிவு படத்துக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்க தீர்மானித்திருக்கிறார் சூர்யா. சூர்யாவின் கால்ஷீட் கிடைக்காததால்தான் கே.வி.ஆனந்த் கோ படத்தை இயக்கி வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கே.வி.ஆனந்தின் படத்தில் நடித்தபடியே த்‌‌ரீ இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் நடிக்க சூர்யா முடிவு செய்துள்ளார்.

இதன் காரணமாக சூர்யாவுக்குப் பதில் கார்த்தியை தனது படத்தில் நடிக்க வைக்க தீர்மானித்துள்ளாராம் கௌதம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.