விஜய்யை முன்னிறுத்தி கோஷ்டி சண்டையை முடுக்கிவிட்டுள்ளார்கள் கோடம்பாக்கத்தில்.
சுறா படத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு அவர் பணம் தர வேண்டும். அப்படி தரும்வரை அவரது படங்களையும், அவரது படத்தை விநியோகிக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் படங்களையும் புறக்கணிப்போம் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது. அதற்கு பதிலடி அறிக்கை வெளிவந்திருக்கிறது. உபயம் விநியோகஸ்தர்கள் சங்கம்.
வியாபாரம் என்றால் நஷ்டமும் இருக்கும், லாபமும் இருக்கும். நஷ்டம் என்றால் உனக்கு, லாபம் என்றால் எனக்கு என்றால் வியாபாரமே செய்ய முடியாது. படம் ஓடவில்லை என்றால் காசு கேட்கும் நீங்கள், படம் பிடிக்கவில்லை என்று ரசிகன் சொன்னால் அவனது பணத்தை திருப்பித் தருவீர்களா என்று காரசாரமாக அறிக்கை வெளியிட்டுள்ளது விநியோகஸ்தர்கள் சங்கம். மேலும் விநியோகஸ்தரான ஆஸ்கர் ரவிச்சந்திரனை கட்டம் கட்டியதையும் கறாராக விமர்சித்துள்ளனர்.
நாளை பதிலறிக்கை வர அதிக வாய்ப்புள்ளதால் கோடம்பாக்கமே பரபரப்படைந்துள்ளது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.