மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விக்ரம் இரட்டை வேடத்தில்.

ஐம்பது படங்களை நெருங்கிவிட்டார் விக்ரம். ஆனாலும் இதுவரை இரண்டு வேடங்களில் அவர் நடித்ததில்லை. இந்தக் குறை விரைவில் மாறப் போகிறது.

விஜய் இயக்கத்தில் தெய்வமகன் படத்தில் நடித்து வரும் விக்ரம் அடுத்து வெண்ணிலா கபடிக்குழு சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. தற்போது சுசீந்திரன் கௌதமின் ஃபோட்டோன் கதாஸ் நிறுவனத்துக்காக அழகர்சாமியின் குதிரை படத்தை இயக்கி வருகிறார்.

சுசீந்திரன் விக்ரமை இயக்கப் போகும் படத்தில் விக்ரமுக்கு இரண்டு வேடங்களாம். இரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற விக்ரமின் நீண்ட நாள் ஆசை இதன் மூலம் பூர்த்தியாகியிருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.