மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்.

சென்னை பாக்ஸ் ஆஃபிஸின் முதல் ஐந்து இடங்களிலிருந்து காவலன், சிறுத்தை, ஆடுகளம் ஆகிய படங்கள் வெளியேறிவிட்டன.

5. ஆடு புலி

ஆதி நடித்திருக்கும் இந்தப் படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 10 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

4. தூங்காநகரம்

விமல் நடித்திருக்கும் இந்தப் படம் இரண்டாவது வார இறுதியில் 10.17 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 1.04 கோடி.

3. யுத்தம் செய்

மிஷ்கினின் யுத்தம் செய் அவரது முந்தையப் படங்களின் வரவேற்பை பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வார இறுதியில் இப்படம் 17.4 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 1.5 கோடி.

2. பயணம்

ராதாமோகனின் பயணமும் எதிர்பார்த்த ஆதரவை பெறவில்லை. சென்ற வார இறுதி வசூல் 21.9 லட்சங்கள். இதன் மொத்த வசூல் 97 லட்சங்கள்.

1. நடுநிசி நாய்கள்

பிரச்சனையை கிளப்பியிருக்கும் நடுநிசி நாய்கள் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்ததற்கு கௌதம் என்ற இயக்குனர் மீது ரசிகர்கள் வைத்த நம்பிக்கையே காரணம். ஆனால் அந்த நம்பிக்கையை கௌதம் இந்தப் படத்தில் காப்பாற்ற தவறியிருக்கிறார். இதன் முதல் மூன்று நாள் வசூல், 47 லட்சங்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.