மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஜீவா, ஆர்யா வெற்றிமாறன் இயக்கத்தில்.

வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க நடிப்பின் மீதும் கலையின் மீதும் நம்பிக்கை உள்ள அனைவரும் தயாராக உள்ளனர். தன்னை மட்டுமே ஊதிப் பெ‌ரிதாக‌க் காண்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்...? அவர்கள் யார் என்பது இதை படித்து முடிக்கும் போது தானாக தெ‌ரிந்துவிடும்.

ஆடுகளத்துக்குப் பிறகு வட சென்னை என்ற படத்தை கார்த்தியை வைத்து இயக்குவதாக இருந்தார் வெற்றிமாறன். இரு ஹீரோ சப்ஜெக்டான இதில் நடிக்க முதலில் ஒத்துக்கொண்ட கார்த்தி பிறகு வேண்டாம் என விலகிக் கொண்டார். இதை கேள்விப்பட்ட ‌‌ஜீவா தானாகவே முன்வந்து நடிக்க சம்மதம் தெ‌ரிவித்துள்ளார். இன்னொரு ஹீரோவாக நடிக்க ஆர்யாவை அணுக, அவரும் உடனடியாக தனது சம்மதத்தை தெ‌ரிவித்துள்ளார்.

‌‌ஜீவாவும், ஆர்யாவும் நண்பர்கள். ராஜேஷ் எம்-மின் சிவா மனசுல சக்தி படத்தில் ஆர்யாவும், பாஸ் என்கிற பாஸ்கரனில் ‌‌ஜீவாவும் நட்புக்காக நடித்துக் கொடுத்ததை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டீர்கள்தானே?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.