மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நேற்று இரு படங்கள் .

நேற்று இரு படங்கள் வெளியாகியுள்ளன. முதல் படம் வானம். சிம்பு நடித்திருக்கும் இப்படம் தெலுங்கில் சூப்பர்ஹிட்டான வேதம் படத்தின் ‌ரீமேக். வேதத்தை இயக்கிய க்ருஷ் வானத்தையும் இயக்கியுள்ளார்.

சிம்புவுடன் பரத், அனுஷ்கா, பிரகாஷ்ரா‌ஜ், சோனியா அகர்வால் என பலர் நடித்துள்ளனர். யுவனின் இசை படத்தின் மிகப்பெரும் பலம். சிம்பு நடிக்க மறுத்த கோ அமர்க்களமான வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனை வானம் முறியடிக்க வேண்டும் என்பது சிம்புவின் ஆசை.

இரண்டாவது படம் சஞ்சய் ராமின் பூவா தலையா. பல வருடங்கள் புரொடக்சனில் இருந்த இந்தப் படம் ஷெ‌ரினின் சம்பள பாக்கி சண்டையுடன் திரைக்கு வந்திருக்கிறது. சஞ்சய் ராமின் முந்தையப் படங்களைப் போல் இதுவும் உண்மைச் சம்பவம், அருவா, கத்தி என வெளிவந்திருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.