கூட்டுக்குடும்பம், யாருக்கும் அடங்காத பிள்ளை, ஆனால் அப்பாவுக்கு மட்டும் தலைகுனிக்கும் பவ்யம், கிராமத்து கோவக்கார பயல்கள், அரை லூசு ஹீரோயின்... இதெல்லாம் இல்லாம என்னால் படமெடுக்க முடியாது என்று தைரியமாகச் சொன்னவர் ஹரி. அவரது வேங்கையும் இதே ஃபார்முலாவில் தயாராகி வருகிறது.
இதில் கோவக்கார செல்வம் என்ற இளைஞனாக தனுஷ். வழக்கம்போல யாருக்கும் அடங்காத திமில் காளை. ஆனால் அப்பா கடைக்கண்ணில் பார்த்தாலே கப்சிப்பாகிவிடும் பணிவு. அப்பாவாக ராஜ்கிரண்.
தனுஷின் நடிப்பை முழுமையாக வெளிக்கொண்டு வந்திருப்பதாக ஹரி கூறியிருக்கிறார். அதேபோல் தமன்னா. இதுதான் ஜோடி என்று சொல்வது போலிருக்குமாம் தனுஷ், தமன்னா காதல் காட்சிகள்.
இன்னும் சில வாரங்களில் வேங்கையை வெள்ளோட்டம்விட இருக்கிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.