மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சிங்கப்பூர் செல்வதற்கு முன்பு ரஜினியின் உருக்கமான பேட்டி

உடல் நலமில்லாமல் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த், மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் நேற்றிரவு சென்றார்.

அங்கு செல்வதற்கு முன் தனது ரசிகர்களுக்காக உருக்கமான பேட்டி அளித்துள்ளார். அவரது குரல் அடங்கிய குறுந்தகடை ரஜினிகாந்தின் குடும்பத்தினர் பத்திரிகையாளர்களுக்கு அளித்தனர்.

அதில் ரஜினிகாந்த் பேசியது அப்படியே உங்களிடம்.

ஹலோ.. நான். ஹா.. நான் ரஜினிகாந்த் பேசறேன்... (வழக்கமான சிரிப்பை உதிர்க்கிறார். ஆனால் அதில் தளர்ச்சி தெரிகிறது.) ம்ம்.. ஹேப்பியா போய்ட்டு வந்துருவேன். ஹேப்பியா போய்ட்டு வந்துகிட்டிருக்கேன் நானு... எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா... நீங்க கொடுக்கிற ஒரு அன்புக்கு, என்னால என்னாத்த திருப்பி கொடுக்கிறது. பணம் வாங்கறேன்... ஆக்ட் பண்றேன். அதுக்கே நீங்க இவ்ளோ அன்பு கொடுக்கறீங்கன்னா... உனக்கு நான் என்னத்த கொடுக்கறது...

உங்களுக்கு டெபனெட்டா, நீங்க எல்லாம் தலை நிமிர்ந்து எங்க பேன்ஸ்ங்க எல்லாம், Through out the world , தலை நிமிர்ந்து வாழ்ற மாதிரி நான் வந்து நடந்துக்கறேன் கண்ணா. கடவுளோட கிருபா எனக்கு இருக்க. குரு கிருபா என் மேல இருக்கு. எல்லாத்துக்கும் மேல கடவுள் ரூபத்துல இருக்க உங்க எல்லா கிருபையும் என் கைல, எம்மேல... எம்மேல இருக்கு . நான் சீக்கிரம் வந்துடறேன் ஓகே... bye… Good.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.