ஒரு நாள் ஊரை ஏமாற்றலாம் பல நாள் ஏமாற்ற முடியாது என்ற படிப்பினையை தாமதமாக புரிந்து கொண்டிருக்கிறது சன் பிக்சர்ஸ்.
அரைவேக்காடு படங்களை அதீத விளம்பரங்கள் மூலம் வெற்றி பெறச் செய்ய முடியும் என்பதை முதலில் உலகுக்கு நிரூபித்ததே சன் பிக்சர்ஸ்தான். இந்த அதீத விளம்பரங்கள் காதலில் விழுந்தேன் போன்ற மிகச் சுமாரான படங்களை வெற்றிப் படங்களாக்கின. இதன் காரணமாக, எங்களிடம் படத்தை விற்றால் அதை ஓட்டிக் காட்டுவோம் என வெளிப்படையாக இறுமாந்து நடந்து கொண்டது சன் பிக்சர்ஸ்.
ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாதில்லையா?
சன் பிக்சர்ஸ் கடைசியாக வெளியிட்ட மாப்பிள்ளை, எங்கேயும் காதல் இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவ்வியிருக்கின்றன. இதில் எங்கேயும் காதல் அட்டர் பிளாப். முன்பெல்லாம் சன் பிக்சர்ஸிடமிருந்து படத்தை வாங்கும் திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டத்தை வேறு வழியில்லாமல் தாங்கிக் கொண்டார்கள். ஆட்சி மாறியதால் அவர்களும் முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது கோரிக்கையாகவும், எச்சரிக்கையாகவும் விரைவில் மாறும் என்பதில் சந்தேகமில்லை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.