3இடியட்ஸ் படத்தின் முக்கியமான ஹைலைட் அமீர்கான், கரீனா கபூரின் முத்தம். கிளைமாக்ஸில் வரும் இந்த முத்தக் காட்சி ஐஸ்கிரீமின் மீது வைத்த செர்ரியாக இனித்தது. இந்த முத்தக் காட்சி நண்பனிலும் இடம்பெறுமா?
நண்பனில் அமீர்கானின் வேடத்தில் விஜய்யும், கரீனாவின் ரோலில் இலியானாவும் நடித்து வருகின்றனர். இவர்கள் தவிர சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் இருக்கிறார்கள். படு வேகமாக படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி இந்தியில் வருவதைப் போன்ற அழுத்தமான முத்தத்துக்கு யாரும் தயாராக இல்லையாம். அப்படியே இருந்தாலும் குஷியின் கிளைமாக்ஸில் வருவதைப் போன்று மென்மையான முத்தமாக அது இருக்கும் என்கிறார்கள்.
முத்தத்தில் வஞ்சம் வைக்காதீங்கப்பா.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.