மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஆட்சி மாறிய பிறகும் இந்த காட்சி மாறவில்லை.

மற்றவர்கள் படத்தின் பாடல்கள், கிளிப்பிங்ஸ்கள், காமெடிக் காட்சிகள் என அனைத்தையும் ஒளிபரப்பி காசு பார்க்கும் சன் தொலைக்காட்சி, சன் பிக்சர்ஸ் வெளியிடும் படங்களின் பாடல்கள், காமெடிக் காட்சிகள் தொடங்கி படத்தின் ஸ்டில்ஸ்வரை யாருக்கும் கொடுப்பதில்லை. முற்று முழுதான சர்வாதிகாரம்.
ஆட்சி மாறிய பிறகும் இந்த காட்சி மாறவில்லை.

ஹ‌ரியின் வேங்கை படத்தின் உ‌ரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. வழக்கம்போல் இதன் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு மற்ற சேனல்காரர்கள், புகைப்படக்காரர்களுக்கு அழைப்பில்லை. முழுக்க சன் கட்டுப்பாடு. விரைவில் இந்த ஆடியோ வெளியீட்டை பிரமாண்ட நிகழ்ச்சி போல் சன்னில் ஒளிபரப்ப இருக்கிறார்களாம்.

தனது படங்களின் கிளிப்பிங்ஸ்கள், ட்ரெய்லர் மற்றும் காமெடி காட்சிகளை பிற சேனல்களுக்கு தராத சன் தொலைக்காட்சிக்கு யாரும் ட்ரெய்லர் உள்ளிட்ட எதையும் கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வர வேண்டும். அப்போதுதான் இந்த சர்வாதிகாரப் போக்கு முடிவுக்கு வரும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.