விஜய் நடித்த சுறா, வேட்டைக்காரன் படங்களுடன் ஒப்பிடுகையில் காவலன் பல மடங்கு மேல். அதற்காக அப்படத்தை மைனா, தென்மேற்குப் பருவக்காற்று, ஆடுகளம் ஏன் களவாணியுடன்கூட படங்களுடன் ஒப்பிட முடியாது. அந்தளவுக்குதான் இருந்தது காவலனின் தரம்.
ஆச்சரியமாக காவலன் படத்தை ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்திருக்கிறார்கள். பெரியவர்களுக்கும் சில நேரம் பிசகு ஏற்படுவது இயல்புதான்.
விஜய் நடித்தப் படம் வெளிநாடு திரைப்பட விழாவில் திரையிடப்படுவது இதுவே முதல் முறையாம். இந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க விஜய்யும் சீனா செல்கிறார். இன்னும் இரண்டொரு தினங்களில் அவரது பயணம் இருக்கும் என்கிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.