நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ராசு மதுரவன் இயக்குகிறார்.
நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் மாமதுரை, அய்யன் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். வடிவேலு தனது மகனை ஹீரோவாக்க கடும் முயற்சி எடுத்தும் மகனின் திறமை மற்றும் சுறுசுறுப்பு காரணங்களால் இதுவரை முயற்சி கை கூடவில்லை. இந்நிலையில் மயில்சாமியின் மகன் அன்பு சத்தமில்லாமல் ஹீரோவாகியிருக்கிறார்.
கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக படங்களுக்குப் பிறகு மதுரையிலிருந்து தனது லொகேஷனை மாற்றி ராசு மதுரவன் எடுக்கயிருக்கும் படம் பார்த்தோம் பழகினோம். பாண்டிநாடு தியேட்டர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில்தான் அன்பு ஹீரோவாக அறிமுகமாகிறார்.
லொகேஷனை மாற்றினாலும் உறவுகளின் கொந்தளிப்பு என்ற தனது கான்செப்டை இந்தப் படத்திலும் ராசு மதுரவன் மாற்றியதாகத் தெரியவில்லை. மகனுக்கும் பெற்றோருக்குமான பாசப் போராட்டத்தைதான் இந்தமுறையும் சொல்லப் போகிறாராம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.