திருப்பாச்சி, சிவகாசி இரண்டு படங்களும் விஜய்யின் மாஸ் இமேஜை கிடுகிடுவென உயரச் செய்தவை. இருந்தாலும் பேரரசின் திருப்பதி, தருமபுரி, பழனி படங்களின் அட்டாக்கைப் பார்த்து ரசிகர்களைப் போலவே விஜய்யும் அதிர்ந்து போனார். விளைவு... கதை சொல்லக்கூட பேரரசுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில் எப்படியோ விஜய்யைப் பார்த்து ஒரு கதை கூறியிருக்கிறார். பேரரசுவின் கரம் மசாலா விஜய்க்கு மட்டும் கரெக்டாக ஃபிட்டாகிவிடும் போல. கதை விஜய்க்கு ரொம்பப் பிடித்திருக்கிறதாம். சீமானை கழற்றிவிட்டு பேரரசு படத்தில் நடித்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்திரருக்கிறாராம் விஜய். விஜயலட்சுமி விவகாரம் வேறு சீமானை சுழற்றி அடிப்பதால் பேரரசுக்கு ஜாக்பாட் அடிக்க அதிக சாத்தியம் உள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.