
தெலுங்கில் ரெடி என்ற பெயரிலும், தமிழில் உத்தமபுத்திரன் என்ற பெயரிலும் வெளிவந்த படத்தை இந்தியில் ரெடி என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டுள்ளனர். சல்மான்கான் நடித்திருக்கும் இப்படம் வார இறுதியில் 40 கோடிக்கு வசூல் செய்து, இந்திய ஓபனிங்கில் தபாங்குக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.
இதையடுத்து வரும் 22ஆம் தேதி சிங்கம் வெளியாகிறது. தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம்தான் அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அஜய் தேவ்கான், காஜல் அகர்வால் நடித்திருக்கும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ் தமிழில் செய்த அதே வில்லன் வேடத்தை இந்தியிலும் செய்திருக்கிறார்.
ரெடி படத்தின் வசூலை சிங்கம் எட்டிப் பிடிக்கும் என்ற நம்பிக்கை பாலிவுட்டில் பரவலாக இருக்கிறது. அதைவிட முக்கியமாக தென்னிந்திய படங்களை ரீமேக் செய்தால் லாபம் நிச்சயம் என்ற நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.
உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.
ReplyDeleteShare