மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சன் பிக்சர்ஸ் மடக்கிய வேங்கையின் விநியோக உ‌ரிமை

வேங்கை படத்தின் விநியோக உ‌ரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.

ஹ‌ரி இயக்கத்தில் தனுஷ், தமன்னா நடித்துவரும் அருவாப் படம் வேங்கை. இந்தப் படத்தின் விநியோக உ‌ரிமையை சன் பிக்சர்ஸ் வாங்குவதாக கூறப்பட்டது. அதேபோல் அவன் இவன் படத்தையும் சன் வெளியிடும் என்று தெ‌ரிவித்திருந்தனர்.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அவன் இவன் படத்தை சன் உதறியது. இதனால் வேங்கைப் படத்தையும் சன் வெளியிடவில்லை என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக அவன் இவனை கைவிட்ட சன் வேங்கையை மட்டும் வாங்கியுள்ளது.

இதற்குமுன் ஹ‌ரியின் சிங்கத்தை வெளியிட்டு லம்பாக லாபம் சம்பாதித்ததுதான் வேங்கையை வாங்க காரணம் என்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.