முத்தம் என்றாலே ஹன்சிகாவின் காதில் புகை வருகிறது. வேலாயுதம் படத்தில் விஜய்க்கு உதட்டோடு உதடு பதித்து முத்தம் தந்தார் என்று பத்திரிகைகள் எழுதியதிலிருந்துதான் இப்படி.
வேலாயுதத்தில் ஹன்சிகாவையும் சேர்த்து இரண்டு ஹீரோயின்கள். ஜெனிலியா ரிப்போர்ட்டராக நடித்துள்ளார். ஹன்சிகா சுறுசுறு கிராமத்துப் பெண்.
இந்தப் படத்தில் விஜயக்கும், ஹன்சிகாவுக்கும் முத்தக் காட்சி இருப்பதாக முதல் க்ளாப் அடித்தபோதே கிளப்பிவிட்டார்கள். அது ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. ரசிகர்களை ஆசை காட்டி மோசம் செய்யக் கூடாதில்லையா? ஹன்சிகாவிடமே கேட்டோம். அப்போதுதான் இந்த புகை.
வேலாயுதத்தில் நான் யாருக்கும் முத்தம் தரவில்லை. தவிர முத்தக் காட்சியிலெல்லாம் நான் நடிக்க மாட்டேன் என்றார் நல்ல பிள்ளையாக.
ம்... ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றம்தான்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.