மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஹன்சிகா நட்சத்திர பேட்டி - பிகினியில் நடிக்க மாட்டேன்

சில நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்க்க ரசிகர்கள் பயப்படுவார்கள். ஹன்சிகாவுக்கு மேக்கப் போடுவதென்றால் பயம். மேக்கப் போடாமலே பளீர் அழகில் கண்களை கூச வைக்கிறார். இவருக்கு ஜெயம் ரவி வைத்த பெயர் தெர்மாகோல். சரும வெளுப்பில் தமன்னாவெல்லாம் இவரது தங்கச்சிதான். விஜய்யுடன் நடித்துவரும் மகிழ்ச்சியில் இருப்பவர் தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார்.

நடிகைகளுக்கு வெரைட்டியான ரோல் கிடைப்பதில்லை என்று ஒரு குற்றச்சாற்று இருக்கே...?

மற்றவர்களைப் பற்றி தெ‌ரியாது. ஆனால் எனக்கு ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடம்தான் கிடைக்கிறது. எங்கேயும் காதல் படத்தில் ஃபிரான்சில் வாழும் மாடர்ன் பெண்ணாக நடித்திருந்தேன். அந்தப் படத்தின் காவே‌ரி கேரக்டருக்கும் வேலாயுதம் படத்தில் வரும் என்னுடைய கேரக்டருக்கும் எநந்த ஒற்றுமையும் இருக்காது. அப்படியே கா‌ண்ட்ராஸ்ட்.

வேலாயுதத்தில் உங்களுக்கு என்ன வேடம்?

கிராமத்துப் பெண்ணாக பாவாடை தாவணியில் வருகிறேன். இதற்கு மேல் அந்தப் படத்தின் கதாபாத்திரம் பற்றி சொல்ல அனுமதியில்லை. என்னோட முதல் ரெண்டு படங்களைப் பார்த்திட்டு தமிழ் லுக் இல்லையேன்னு சொன்னவங்க வேலாயுதம் பார்த்துட்டு தமிழ்‌ப் பெண் மாதி‌ரியே இருக்கேன்னு பாராட்டப் போறாங்க. அந்தளவுக்கு வித்தியாசமான வேடம்.

எங்கேயும் காதல் அனுபவம் எப்படி?

ஃபிரான்சில் வாழும் பெண்ணா நடிக்கிறது உண்மையிலேயே சவாலாகதான் இருந்தது. கொஞ்சம் பயமா இருந்ததுன்னுகூட சொல்லலாம். பிரபுதேவா மாதி‌ரி ஒரு நல்ல டைரக்டர் கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம். படம் ‌ரிலீஸாகிற வரை பயமாகதான் இருந்தது. படம் நல்லா போகுதுன்னு கேள்விப்பட்டப் பிறகுதான் நிம்மதியே வந்தது.

பிரபுதேவாவை நீங்க அண்ணன்னு சொல்றீங்க, ஆனா இ‌ண்டஸ்ட்‌ரியில் வேற மாதி‌ரி பேசுறாங்களே?

பிரபுதேவா என்னைவிட மூத்தவர். அதனால் அண்ணன்னு சொல்றேன். உண்மையில் ஒரு அண்ணன் மாதி‌ரிதான் என்னோட திறமைகள் வெளிக்கொண்டுவர முயற்சி எடுத்துகிட்டார். அவரை என் அண்ணனாகதான் நினைக்கிறேன்... அதை எங்க வேணும்னாலும் சொல்வேன்.

இரண்டு ஹீரோயின் சப்ஜெக்டில் நடிக்கிறீர்களே... பிரச்சனையாக இல்லையா?

வேலாயுதம் படத்தில் ஜெனிலியாவும் நடிச்சிருக்காங்க. எனக்கும் அவங்களுக்கும் வேற வேற கேரக்டர்ஸ். இரண்டுமே நல்லா வந்திருக்கு. மத்தபடி எந்தப் பிரச்சனையும் இல்லை. இரண்டு பேருக்குமே அதிக காட்சிகள் இருக்கு. ஆனா இனி இரண்டு ஹீரோயின் சப்ஜெக்டில் நடிக்கிறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

அடுத்து எந்தப் படம்?

வேலாயுதம் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிஞ்சிடுச்சி. அடுத்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிக்கிறேன். இது தவிர ரெண்டு தெலுங்குப் படத்திலும் கமிட்டாகியிருக்கேன்.

இதுவரை நீங்கள் இணைந்து நடித்த ஹீரோக்கள் எப்படி?

எல்லோருமே ஒரே மாதி‌ரிதான், நைஸ் பர்சன்ஸ். தனுஷ் ரொம்ப அமைதி... சாஃப்ட். ஜெயம் ரவி இருந்தா செட்டே கலகலன்னு இருக்கும். விஜய் ஜென்டில்மேன், இருக்கிற இடமே தெ‌ரியாது. உதயநிதியுடன் இப்போதுதான் நடிச்சிட்டு வர்றேன். ஒரு விஐபி-யோட மகன்ங்கிற பந்தா இல்லாம பழகறார்.

பிகினியில் நடிப்பீர்களா?

ஸ்விம் சூட்டில் நடிச்சிருக்கேன். ஆனா பிகினியில் கண்டிப்பாக மாட்டேன்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.