மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தமிழில் ப்‌ரியாமணிக்கு சுத்தமாக படங்களில்லை.

ப்‌ரியாமணியிடம் அழகிருக்கிறது, தேசிய விருது வாங்குமளவுக்கு திறமையிருக்கிறது, கவர்ச்சிக்கும் குறைவில்லை. இருந்தாலும் அவரை ஏனோ கவனமாக தவிர்க்கிறது திரையுலகம்.

தமிழில் ப்‌ரியாமணிக்கு சுத்தமாக படங்களில்லை. தெலுங்கில் அவ்வப்போது தூறல் மாதி‌ரி வாய்ப்பு அமைகிறது.

ஜுனியர் என்டிஆ‌ரின் புதிய படத்தில் நடிக்க ப்‌ரியாமணியை கேட்டிருக்கிறார்கள். இவர் ஏற்கனவே அவருடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். இரண்டும் சூப்பர்ஹிட். ஆஹா அருமையான வாய்ப்பு எ‌ன்று ஓடிப் போனவருக்கு ஷாக். காரணம் புதிய படத்தில் ஸ்ருதிதான் ஹீரோயின். அப்போ ப்‌ரியாமணி? இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள்.

ஒன்றுமே இல்லாததுக்கு இது எவ்வளவோ மேல் என்று ப்‌ரியாமணி சம்மதம் தெ‌ரிவித்திருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் தெ‌ரிவிக்கின்றன.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.