மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> எமி ஜாக்ஸன் மலையாளத்தில்.

வெளிநாட்டு நடிகையொருவர் அதுவும் வெள்ளைத்தோல் அழகி ஒரு படத்துக்கு மேல் இந்திய திரையுலகில் தாக்குப் பிடித்ததாக தகவலில்லை. இந்த‌ச் ச‌ரித்திரத்தை முறியடித்துக் கொண்டிருக்கிறார் மதராசப்பட்டினத்தில் அறிமுகமான எமி ஜாக்ஸன்.

இங்கிலாந்து மாடல் மற்றும் நடிகையான எமி ஜாக்ஸ‌ன் மதராசப்பட்டினத்துக்குப் பிறகு கௌதமின் இந்தி விண்ணைத்தாண்டி வருவாயாவில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடையும் முன் மலையாளத்திலிருந்து அடுத்த வாய்ப்பு.

லால் ஜோஸ் இயக்கத்தில் திலீப் நடிக்கும் ஸ்பேனிஷ் மசாலா படத்தில் திலீப் ஜோடியாக நடிக்க எமி-யிடம் கேட்டுள்ளனர். இப்படத்தின் கதைப்படி நாயகி ஸ்பானிஷை சேர்ந்தவர். எமி ஜாக்ஸனைவிட்டால் இந்த ரோலுக்கு இந்தியாவில் வேறு யாருமில்லை. வெளிநாட்டிலிருந்து புதிதாகதான் நடிகையை தருவிக்க வேண்டும்.

அனேகமாக எமியும் இந்த ஆஃபரை ஏற்றுக் கொள்வார் என்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.