கௌதமின் அடுத்தப்பட ஹீரோ ஜீவா என்பது உறுதியாகியிருக்கிறது. காதல் கதையாம். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக கௌதமின் ஃபேவரைட் சமந்தாவாக இருக்கலாம்.
ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்புக்குச் செல்ல தயாராகி வருகிறார்கள்.
சூர்யா, கமல், தெலுங்கின் முன்னணி ஹீரோக்கள் இருவர் என கௌதம் படம் பண்ணுவார் என நம்பப்படும் நடிகர்களின் பட்டியல் நீண்டு கிடக்கிறது. இதில் சிம்புவும் இணைந்திருக்கிறார்.
கௌதமுடன் மீண்டும் இணைவதில் சந்தோஷம். நாங்கள் இணையும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகமா அல்லது முற்றிலும் புதிய ஸ்கிரிப்டா என்பது தெரியாது. எதுவாக இருந்தாலும் இன்றைய இளைஞர்களின் பல்ஸ் தெரிந்தவர் கௌதம் என புகழ்ந்திருக்கிறார்.
ஆக, கதை எதுவானாலும் கௌதமின் வட்டாரத்தில் சிம்புவும் இருப்பது உறுதியாகியிருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.