வேங்கை வெளிவந்திருக்கிறது. கூடவே வெறுப்பும். ஹீரோ மீதான கசப்பை காட்டமாகவே வெளியிட்டிருக்கிறார் இயக்குனர்.
வேங்கை படப்பிடிப்பின் போது தனுஷுக்கும், ஹரிக்கும் நடுவில் மோதல் ஏற்பட்டது தமிழகம் அறிந்த செய்தி. இந்த மோதல் கடைசிவரை மோதலாகவே நீடித்தது. படம் வெளியான பிறகு அது வெறுப்பாக வெளிவந்துள்ளது.
ஹரி இயக்கத்தில் நடிப்பதில்லை என தனுஷும், தனுஷை இயக்குவதில்லை என ஹரியும் தனித்தனியே சபதம் எடுத்துள்ளனர். இதன் உச்சக்கட்டம் பத்திரிகையாளர் சந்திப்பு. தனுஷ் ரிஸ்க் எடுக்க விரும்பலை அதனால் சண்டைக் காட்சிகளில் டூப்பை பயன்படுத்தினோம் என தனுஷை வாரினார் ஹரி. அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. சூர்யாதான் பெஸ்ட்... டூப்பே போட்டுக்கிறதில்லை என விமர்சனத்தின் சூட்டை மேலும் அதிகமாக்கினார்.
தனுஷிடமிருந்து இதற்கு இன்னும் பதில் வரவில்லை. பக்குவப்பட்டவரல்லவா...?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.