
காவலன் படத்தை வெளிவர விடாமல் சன் குழுமம் ஏற்படுத்திய பிரச்சனைகள் குறித்து நடிகர் விஜய் முன்பே விரிவாக பேட்டியளித்துள்ளார். அப்போது அவர்கள் ஆட்சி என்பதால் அது பேட்டியுடன் முடிந்து போனது. ஆனால் இன்று அவர்களே அடுக்கடுக்கான புகார்களின் பேரில் உள்ளே போய்க் கொண்டிருக்கிறார்கள்.
காவலனில் ஏற்பட்ட இழப்புக்கும், அவமானத்துக்கும் விஜய் பழி வாங்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின், நலம் விரும்பிகளின் விருப்பம். விஜய்யிடமும் அந்த கோபம் இருப்பதாக சொல்கிறார்கள். காவலன் படத்துக்கு நெருக்கடி கொடுத்தது, கடைசிநேர நெருக்கடியால் பல கோடி ரூபாய் ஓபனிங் இழப்பு ஏற்பட்டது இவையெல்லாம் விஜய்யின் மனதிலும் வடுவாக உள்ளது.
காவலன் சார்பில் விஜய்யும் சன் பிக்சர்ஸ் மீது புகார் கொடுக்க அதிக சாத்தியங்கள் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரி விக்கின்றன. சன் பிக்சர்ஸ் இதுவரை சந்தித்தது தலைவலி என்றால் இனி சந்திக்கப் போவது திருகுவலி என்கிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.