ஷங்கரின் மிக வேகமான படம் நண்பன். இதுதான் அவரது முதல் ரீமேக். முதல்வனை இந்தியில் ரீமேக் செய்திருந்தாலும் இன்னொருவரின் படத்தை ரீமேக் செய்வது இதுதான் முதல்முறை.
ஊட்யில் தொடங்கி வெளிநாடுகளில் படப்பிடிப்பை முடித்து சென்னையிலும் சில காட்சிகளை ஷங்கர் படமாக்கினார். ஜீவா, ஸ்ரீகாந்த் சம்பந்தப்பட்ட இந்தக் காட்சிகள் படமானது கேயம்பேட்டிலுள்ள வாட்டர் டேங்க் அமைந்துள்ள பகுதியில். இங்கு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையமும் இயங்கி வருகிறது. படத்தின் முக்கியமான காட்சிகள் சிலவற்றை ஷங்கர் இங்கு படமாக்கினார்.
தீபாவளிக்கு நண்பன் வெளிவருவது கடினம் என்பதே யூளிட்டின் பேச்சு. நண்பன் வெளியீடு கிறிஸ்துமஸ் இல்லை பொங்கலா? ஷங்கரின் பதிலுக்கு திரையுலகம் காத்திருக்கிறது.
nanraaka ullathu nanpare vivasaayi
ReplyDelete