இன்றைய தேதியில் பிஸியான நடிகர் என்றால் அது சந்தானம்தான். வருகிற படங்களில் பாதி படங்கள் இவரை நம்பியே வருகின்றன. பிசினஸும் இவரை வைத்தே.
சந்தானம் நடிக்கும் படங்களின் எண்ணைக்கை டஜனை தாண்டும். இவருக்காக காத்திருந்துதான் படப்பிடிப்பையே நடத்துகிறார்கள். உதாரணம் ஒரு கல் கரு கண்ணாடி.
உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் இந்தப் படத்தை ராஜேஷ் எம். இயக்குகிறார். இவரின் முதலிரண்டு படங்களிலும் ஹீரோ அளவுக்கு சந்தானத்தின் ரோலும் இருக்கும். ஒரு கல் ஒரு கண்ணாடி மூன்றாவது படம். இதிலும் ஹீரோவுக்கு இணையான ரோல்.
எப்போதோ பூசணிக்காய் உடைத்திருக்க வேண்டிய படம் சந்தானத்தின் ஆப்சென்டால் அரை கிணறே தாண்டியிருக்கிறது. கழக ஆட்சியின் போது படம் தொடங்கப்பட்ட நேரம் கால்ஷீட்டை அள்ளித் தந்தார். இப்போது கழகம் கம்பிக்குப் பின்னால் சந்தானமும் கால்ஷீட்டில் கறாராகவிட்டார். மற்ற படங்களுக்கு கொடுக்கும் மரியாதைதான் இதற்கும்.
ம்... ஆட்சி மாறினால் என்னவெல்லாம் மாறுகிறது.
வளரும் சந்தானமும் ஒழிக்க நினைக்கும் சில தமிழ் சினிமா இணையங்களும்
ReplyDeleteசந்தானத்த என்னா அகா துகானு நினைச்சிடீங்களா?