மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


போடி நாயக்கனூர் கணேசன் சினி விமர்சனம்

மதுரை சம்பவம் படத்துக்குப் பிறகு ஹ‌ரிக்குமார் நடித்திருக்கும் படம். ஹ‌ரிக்குமார் படத்துக்கு கலையை எதிர்பார்த்து யாரும் வரப்போவதில்லை. காதல், காமெடி, ஆக்சன், சென்டிமெண்ட்... இதில் ஏதாவது ஒன்று ஒர்க் அவுட்டானேலே போதும்... அதிசயம்.

போடி நாயக்கனூர் கணேசனைப் பார்க்கும் போது ஒன்று தெ‌ரிகிறது. பருத்திவீரன் ஹேங்ஓவ‌ரிலிருந்து இன்னும் தமிழ்‌த் திரையுலகம் மீளவில்லை.

பன்றி மேய்க்கும் வில்லன், பதற்றமானால் வலிப்பு வரும் ஹீரோ, பொறுக்கி உன்னை யாரு லவ் பண்ணுவா என்று ஹீரோவுக்கு இனிமா தரும் ஹீரோயின் என்று மேலோட்டமாகப் பார்த்தால் நன்றாகதான் இருக்கிறது. ஆனால் மெயின் நீரோட்டம்... அதுதான் சிக்கலே.

பப்ளிக்காக பன்றியை கொன்று அவ்வப்போது பெண்களையும் கொல்லும் கற்கால வில்லன். அவனிடம் அடிமைப்போல கஞ்சாவும், கள்ளச் சாராயமும் விற்கும் ஹீரோ. காம்பினேஷன் ச‌ரியில்லையே என்று யோசிக்கும் போது வருகிறது இருவ‌ரின் பால்யகால ஃபிளாஷ்பேக். வேலைக்காரன் மகன் என்னைவிட புத்திசாலியாக இருக்கக் கூடாது என்று அந்த பிஞ்சு வயசிலேயே ஹீரோ ஹ‌ரிக்குமாருக்கு நஞ்சை பழக்குகிறார் வில்லன் சஞ்சய் ரவி. முதலாளியின் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு அனைத்தையும் சகித்துக் கொள்ளும் ஹ‌ரிக்குமார் தான் காதலிக்கும் பெண்ணையே காவு கொடுக்க வேண்டி வருமோ என்ற சூழலில் அடிமைத்தனத்தை ஒதுக்கி வைத்து திருப்பி அடிக்கிறார். சுபம்.

எல்லாப் பழியையும் சுமக்கும் தியாகத்திருவுரு கேரக்டர் ஹ‌ரிக்குமாருக்கு. எந்த சிச்சுவேஷனுக்கும் எக்ஸ்பிரஷன் மட்டும் காட்டவே மாட்டேன் என்று அவர் அடம் பிடிப்பதுதான் ச‌ரியில்லை. பிடிவாதத்தை விடுங்க பாஸ். இவருக்கு பக்க வாத்தியமாக சூ‌ரி. காமெடியனாக வருகிறவ‌ரின் கழுத்தில் சுருக்கு மாட்டி தொங்க விடுகிறார்கள். ஹீரோவுக்கு கோபம்வர என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.

பார்க்க தமிழ்நாட்டு கிராமத்து பெண் போலவே இருக்கிறார் அருந்ததி. ஹ‌ரிக்குமார் காதலை சொன்னதும், உன்னை எல்லாம் யாரு காதலிப்பா என்று படக்கென்று முறுக்கும் போது அடடா இது நல்லாயிருக்கே என்று தோன்றுகிறது. அவரே அடுத்தக் காட்சியில் பால்ய நட்பை சொல்லி ஹ‌ரிக்குமா‌ரிடம் பம்மும் போது சப். வழக்கமான ஹீரோயின்.

ஹ‌ரிக்குமார் அடங்கிப் போவதற்கு முதலாளியின் சத்தியம், மூளை வளர்ச்சி இல்லாத சகோதரன் என்று காரணங்களை அடுக்கியிருக்கிறார் இயக்குனர். காட்சிகளுக்கான லா‌ஜிக்கை உருவாக்குவதில் இயக்குனர் ஞானம் இன்னொரு ஹ‌ரி. பன்றி பிடிக்கும் வில்லன் நல்ல கற்பனை. பன்றியை கொல்லும் உலக்கையால் ஹ‌ரிக்குமா‌ரின் மூளை வளர்ச்சியில்லாத தம்பியை கொல்வது... தேவையில்லாத கொடூரம்.

இரண்டு மூன்று முறை கேட்டால் பாடல்கள் பிடித்துப் போகும். சண்டைக் காட்சியில் பத்து வாத்தியங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு கொண்டு வந்தால் தேவலை. ஒளிப்பதிவு ஓகே ரகம். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், போடி நாயக்கனூர் கணேசன் இந்த வருடத்தின் இன்னுமொரு படம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.