சோனாவின் தேவையில்லாத விமர்சனம் நமிதாவை ரொம்பவே கோபப்படுத்தியிருக்கிறது. சென்னை பக்கம் வரவே அவர் சங்கடப்படுவதாக கூறுகிறார்கள். அவரின் மனதிற்கேற்ப புதிய படம் ஒன்று அமைந்திருப்பதுதான் விசேஷம்.
தமிழில் நமிதா தலைகாட்டி பல மாமாங்கம் ஆகிறது. இப்போது ஒப்புக் கொண்டிருப்பதும் தெலுங்கில். ஹீரோயின் ஓரியண்ட் கதையாம். Shukru என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதுதான் படத்தில் நமிதாவின் கேரக்டர் பெயர்.
எனக்குப் பிடித்த வேடம், இதுபோன்ற கதைக்குதான் காத்திருந்தேன் என்று படத்தொடக்க விழாவில் சிலாகித்து பேசியிருக்கிறார். சென்ற மாதம் 25ஆம் தேதியிலிருந்து படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. ரவி வர்மா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்குகிறார்.
தமிழிலும் இப்படம் வெளிவர உள்ளது என்பதால்தான் இந்த நீண்ட செய்தி.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.