தெய்வத்திருமகள் படம் நல்ல விமர்சனத்துடன் தமிழகமெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்பமாக ரசிகர்கள் திரையரங்குக்கு வருவதை நெடுநாளைக்குப் பிறகு இப்படம் சாத்தியமாக்கியிருக்கிறது. அதேநேரம் இசை விமர்சகர் ஷாஜி இந்தப் படத்தின் அபத்தங்கள் குறித்து நேர்மையாக பதிவு செய்திருக்கும், தெய்வத்திருமகள் - நகல் அல்ல போலி என்ற விமர்சனத்தையும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். சிறந்த ஒப்பு நோக்கு விமர்சனம் இது.
நிற்க. நமது விஷயத்துக்கு வருவோம். தெய்வத்திருமகளின் ஆரம்பக் காட்சியில் வக்கீலாக வரும் சந்தானம் கதாபாத்திரத்தின் வழியாக வழக்கறிஞர் தொழிலும், வழக்கறிஞர்களும் கிண்டல் செய்யப்படுகின்றனர். இது ஆச்சரியமில்லை. காவல்துறை, ஆசிரியர், அரசியல்வாதி என்று சினிமாக்களில் கிண்டல் செய்யப்படாதவர் எவருமில்லை. ஆனால் இது வக்கீல்கள் விவகாரம்.
ஏற்கனவே சிவகாசி படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் வழக்கறிஞர் வேடம் பிரச்சனைக்குள்ளானது. நாயகன் விஜய்க்கு எதிராகவும் வழக்குகள் போடப்பட்டன. தெய்வத்திருமகள் விஷயத்தில் வக்கீல்கள் ரொம்ப லேட். படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். சந்தானம் மன்னிப்பு கேட்க வேண்டும், குறிப்பிட்ட காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்.
படம் ஓடவில்லையென்றால் இப்படியொரு போராட்டம் நடந்திருக்காது. காய்த்த மரம் கல்லடிப்படும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.