![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi-mrk860HW4OOJrL3pSAvxTCFj0oC_70XFE6V0CrK3Xi1O6mTvCmRJFGwmHBhp4EA341F7YnXfiARnjhgYlH3Xi_10nlw_ZEq49WNYXryDLCmnDBvka8DTndWUJd4uf1onr81nqyNiOU/s200/Chennai+Box+Office+movie+rating.jpg)
5. உயர்திரு 420
சினேகன் ஹீரோவாக உயர்வு பெற்றிருக்கும் இத்திரைப்படம் சென்ற வார இறுதியில் 2.36 லட்சங்களை வசூலித்துள்ளது. பத்து தினங்கள் முடிவில் இதன் வசூல் 20.6 லட்சங்கள்.
4. முதல் இடம்
ஏவிஎம்-மின் முதல் இடத்துக்கு நான்காவது இடமே கிடைத்துள்ளது. சென்ற வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 17.75 லட்சங்களை வசூலித்துள்ளது.
3. தெய்வத்திருமகள்
இத்திரைப்படம் சென்ற வார இறுதியில் 17.9 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல், 6.64 கோடிகள்.
2. ரௌத்திரம்
ஜீவாவின் ரௌத்திரம் சென்ற வார இறுதியில் 32.3 லட்சங்களை வசூலித்துள்ளதது. இதன் மொத்த சென்னை வசூல் 1.93 கோடி.
1. காஞ்சனா
ஆச்சரியமாக... அதிசயமாக பல வாரங்கள் மூன்றாவது இரண்டாவது இடத்தில் இருந்த காஞ்சனா அனைத்துப் படங்களையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 44.5 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை 3.77 கோடிகளை சென்னையில் மட்டும் அறுவடை செய்துள்ளது. காஞ்சனாவின் கலெக்சன் இன்னும் தொடரும் என்றே தெரிகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.