தபாங் படத்தின் ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதில் ஆப்டாக மாட்டிவிட்டது. ஆனால் ஐட்டம் கேர்ள்தான் சிக்கவில்லை.
ஒஸ்தியில் ஒரு குத்துப் பாடல் இருக்கிறது. தபாங்கில் இந்தப் பாடல்தான் மிகப் பிரபலம். இதில் சிம்புவுடன் ஆட இந்தியின் முன்னணி ஹீரோயினுக்கு வலை வீசியிருக்கிறார்கள். காஸ்ட்லி வலை. ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ளது.
கத்ரினா கைஃபில் இருந்து பிபாசா பாசு, தீபிகா படுகோன் என்று அனைவரையும் அப்ரோச் செய்ய தீர்மானித்திருக்கிறார்கள் சிம்புவும், தரணியும். ஆட சம்மதம் தருகிறவர்களுக்கு ஒரு கோடி வரை கொடுக்க தீர்மானித்திருக்கிறார்களாம்.
ஒரு கோடி கொஞ்சம் அதிகம்தான் பாஸ்
ReplyDelete