மங்காத்தா படத்தின் குழப்பம் உச்ச நிலைக்கு சென்றுள்ளது. ஆகஸ்ட் 31 படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கும் நிலையில், யார் படத்தை வெளியிடப் போகிறார்கள் என்பதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
மங்காத்தா சென்ற ஆட்சியில் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் சார்பில் தொடங்கப்பட்டது. ஆட்சி மாறும் வரை எந்தச் சிக்கலும் இல்லை. ஆட்சி மாற்றம் ஒரேயடியாக தயாநிதி அழகிரியின் அதிர்ஷ்டத்தை தலைகீழாக்கியது. படத்தை வாங்க அனைத்துத் தரப்பினரும் தயங்கினர். கிளவுட் நைனின் தோல்விப் படங்களுக்கான நஷ்டஈடை இந்தப் படத்தில் சரிகட்ட பரபரத்தனர்.
கிளவுட் நைன் சார்பில் படத்தை வெளியிட முடியாது என்ற நிலையில் பிற நிறுவனங்களுடன் பேரம் பேசப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா மங்காத்தாவை வெளியிட முன்வந்தார், விளம்பரங்களும் வெளிவந்தன.
இந்நிலையில் திடீரென்று தனது முடிவில் இருந்து ஞானவேல் பின்வாங்கியுள்ளார். நேற்று மதியம் அரசல்புரசலாக இருந்த இந்த விஷயம் இன்று காலை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இப்போதைய கேள்வி மங்காத்தாவை யார் வெளியிடப் போகிறார்கள்?
மங்காத்தாவின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் வாங்கியுள்ளது. அவர்களே இந்தப் படத்தை வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.