ஆகஸ்ட் மாதம் நல்ல அறுவடை. திரையரங்கு கிடைக்காத அளவுக்கு படங்கள் முண்டியடிக்கின்றன. ரசிகர்கள் எதிர்பார்த்த மங்காத்தாவும், வேலாயுதமும் சைலண்டாக இருப்பது ஏமாற்றம்தான், ரசிகர்களுக்கு. விருந்தை எதிர்பார்த்தவர்களுக்கு மருந்தாக ரௌத்திரம் வெளியாவது ஆறுதல்.
ஜீவா நடித்திருக்கும் ரௌத்திரத்தில் ஸ்ரேயா ஹீரோயின். ஆக்சன் கதை. சமூக கோபமும் உண்டு. நேற்று வெளியான ஐந்தில் அதிக எதிர்பார்ப்பு இதற்குதான்.
அடுத்து பாடலாசிரியர் சினேகன் ஹீரோவாக அறிமுகமாகும் உயர்திரு 420. தில்லு முல்லுகள் நிறைந்த கதை. கிளிக்கானால் சினேகன் பாடல எழுதுவதை விட்டுவிட்டு ஹீரோவாக பிஸியாக வாய்ப்புள்ளது.
சகாக்கள் இன்னொரு படம். இதுவரை படத்துக்கு எதிர்பார்ப்பில்லை. படம் நன்றாக இருந்து வாய்வழி விமர்சனத்தில் பிக்கப்பானால் உண்டு. சங்கரன்கோவில் படம் பல ரிலீஸ் தேதிகளை கடந்து ஒருவழியாக நேற்று வெளியாகியுள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஹீரோவாக நடித்திருக்கும் படம். இவைகளுடன் பாடலாசிரியர் ஏகாதசி இயக்கியிருக்கும் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படமும் திரைக்கு வருகிறது.
ஏற்கனவே படங்களில் நடித்திருக்கும் கனல் கண்ணன், சினேகன் நேற்று ஹீரோவாக பிரமோஷன் பெற்றிருக்கிறார்கள். அதேபோல் ஏகாதசிக்கும் இது கௌரவ புரமோஷன். கெலிக்கிறார்களா என்று பார்ப்போம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.