கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும் என்று யுவன் குரல் எடுத்துப் பாடும் போது யாரால்தான் ரசிக்காமல் இருக்க முடியும்? என்றாலும் விஐபி-கள் இதனை சொல்லும் போது செய்திக்கு கனம் கூடும்.
ஜெயம் ரவி நடிக்கும் ஆதிபகவானுக்கு யுவன் இசை. அமீரின் முந்தையப் படங்களுக்கும் யுவன்தான் இசை. அமீருக்கு இசையமைக்கும் போது யுவனின் கீபோர்டில் இளமை ஊஞ்சலாடுமோ என்று ஏற்கனவே பலர் கேட்டிருக்கிறார்கள். ஆதிபகவானிலும் அதுதான் நடந்திருக்கிறது.
யுவன் மூன்று பாடல்கள் போட்டிருக்கிறார். அதைக் கேட்டு அசந்து போனேன் என்று தனது வியப்பை வார்த்தையாக்கியிருக்கிறார் ஜெயம் ரவி. யுவனின் இசையை கேட்பது காதுக்கின்பம் என்றால், ஆதிபகவானில் ஆடப் போவது நீது சந்திரா.
அப்போ கண்களுக்கும் இன்பம் இருக்கிறது.
பாராட்டுகள்
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com