![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpRIzWK71eBcGHPXg4xvsyLHfV1NDwen6NzHqrQh4p5g0WHAFDjJGdbUBK2Z-5hyBA6aOU4M5FI-Rr1t5Qg_9aDDfHzHlrexu46ct0W0_NHvKB48pBwbpkOyna6CD4np3TnaHzvERY4N4/s320/Trisha+goes+to+Malayalam+movie+download.jpg)
திருமணமானாலும், புதுப்படமானாலும் த்ரிஷா விஷயமென்றால் கேள்விக்குறியோடுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. த்ரிஷா விரைவில் மலையாளத்தில் நடிக்கக்கூடும் என்கிறார்கள்.
பிருத்விராஜ் நடிக்கும் மாஸ்டர்ஸ் படத்தில் சசிகுமார், பியா நடிப்பது பற்றி சில வாரங்கள் முன் குறிப்பிட்டிருந்தோம். அடுத்து ஹீரோ என்ற படத்தில் பிருத்வி நடிக்கிறார். இந்தப் படத்தில் திரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. தீபன் என்பவர் ஹீரோவை இயக்குகிறார். நல்ல வேடம் அமைந்தால் மலையாளத்தில் நடிப்பேன் என்று த்ரிஷா கூறி வருவதால் ஹீரோவில் அவர்தான் நாயகி என மலையாளிகள் சப்பு கொட்டுகிறார்கள்.
மேலும், இந்தப் படத்தில் ஸ்ரீகாந்தை வில்லனாக நடிக்கக் கேட்டிருக்கிறார்களாம். பிருத்வியின் முதல் படம் கனா கண்டேனில் ஸ்ரீகாந்த் ஹீரோ, பிருத்வி வில்லன்.
பழி வாங்குகிறாரோ?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.