![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUSMyaMqvbnWXeoqR9F_h5PVTD8tHhM8Ouwz0_qINcnlo3rg6OXUt1juJwyHc2vnrIP4OD0jU8HqNt_3XE759ILxGggBDC1JDNjoMc8hZlns4TA8XQjyPcd4xFqtxCPFtOglgn4v5OYUs/s320/Nasar+to+act+in+Siruthai+Hindi+Remake.jpg)
கஜினி, காவலன், சிங்கம் படங்களைத் தொடர்ந்து சிறுத்தையும் இந்தியில் ரீமேக்காகிறது. இதில் வில்லனாக நடிக்கப் போவது நம்மூர் நாசர்.
கமர்ஷியல் வெற்றிக்கு தென்னிந்தியப் படங்களின் கதையை நம்புகிறது பாலிவுட். அத்துடன் நடிகைகளையும் இங்கிருந்தே தேர்வு செய்கிறார்கள். கூடுதலாக சிங்கம் படத்தில் வில்லனாக பிரகாஷ்ராஜை நடிக்க வைத்தார்கள்.
படத்தின் விமர்சனத்தை எழுதிய பலரும் அஜய்தேவ்கானுக்கு இணையாக பிரகாஷ்ராஜை பாராட்டினார்கள். உண்மையும் அதுதான். வில்லன் கதாபாத்திரத்தை தனது அதிரடி நடிப்பால் அதிர வைத்திருந்தார் பிரகாஷ்ராஜ்.
இந்நிலையில் சிறுத்தைப் படத்தின் இந்தி ரீமேக்கில் வில்லனாக நடிக்க நாசரை தேர்வு செய்துள்ளனர். இந்த ரீமேக்கில் அக்சய் குமார் ஹீரோவாக நடிக்க சோனாக்சி சின்கா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.