
வரும் 12ஆம் தேதி ஜீவாவின் ரௌத்திரம் ரிலீஸ். இதன் காரணமாக ஜீவாவின் இன்னொரு படமான வந்தான் வென்றான் அடுத்த மாதமே திரைக்கு வருகிறது.
கோ படம் ரங்கம் என்ற பெயரில் நூறு நாள் தாண்டியதால் ஜீவாவுக்கென ஒரு மார்க்கெட் ஆந்திராவில் உருவாகியிருக்கிறது. அதனை அறுவடை செய்யும் வேலையில் உள்ளது வந்தான் வென்றான். ஆம், வந்தான் வென்றான் இங்கு வெளியாகும் அதேநாள் ஆந்திராவில் தெலுங்கில் வெளியாகவுள்ளது.
தெலுங்குப் பதிப்புக்கு வச்சடு கெலிச்சடு என்று பெயர் வைத்துள்ளனர்.