பொன்னியின் செல்வன் இல்லை என்றாகிவிட்டது. அப்படியானால் அடுத்து என்ன?
மணிரத்னம் அடுத்து காதல் கதையை படமாக்குகிறார் என்பதே பரவலாக சொல்லப்படும் செய்தியாக உள்ளது. இதற்காக கேரளாவின் கடற்கரையோரமாக லொகேஷன் பார்த்திருக்கிறார். இந்தக் காதல் கதையில் கார்த்திக்கின் மகன் கௌதம் நடிக்கக் கூடும் என்றும் பேச்சிருக்கிறது. இவை தவிர முக்கியமான இரு தகவல்கள் உள்ளன.
ஒன்று, ஜெயமோகன் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதுகிறாராம். பொன்னியின் செல்வனுக்காக மணிரத்னத்தால் அழைக்கப்பட்டவர் இப்போதும் அவரது அணியில் தொடர்கிறார்.
இரண்டு, பம்பாய் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராஜிவ் மேனனை தனது புதிய படத்தில் பயன்படுத்த மணிரத்னம் விரும்புகிறாராம்.
மணிரத்னத்தின் படக்காட்சியைப் போல் இருட்டும் வெளிச்சமுமாகதான் இருக்கின்றன அவரது அடுத்தப்படம் குறித்த தகவல்களும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.