மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தல இப்படி தலைமறைவா இருக்கிறது ச‌ரியா?

மங்காத்தா என்றில்லை, எந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாலும் அ‌‌ஜீத் வைக்கும் முதல் நிபந்தனை, படத்தின் புரமோஷன் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். படத்தைப் பார் என்று நான் யாரையும் வற்புறுத்த மாட்டேன். படம் நன்றாக இருந்தால் மட்டும் ரசிகர்கள் பார்த்தால் போதும். அ‌‌ஜீத்தின் இந்த பாலிசி இன்று வரை தொடர்கிறது.

இந்த பாலிசி காரணமாக அ‌‌ஜீத் நடிக்கும் படங்களின் ஆடியோ வெளியீடு அமைதியாகவே நடக்கும். பெரும்பாலும் விழா எதுவுமில்லாமல் சிடிகள் நேராக கடைக்கு வந்துவிடும்.

மங்காத்தா அ‌‌ஜீத்தின் 50வது படம். ஆடியோ விழா பிரமாண்டமாக நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஐம்பதும் ஒன்றுதான் முப்பதும் ஒன்றுதான் என இந்தமுறையும் ஒதுங்கிவிட்டார் அ‌‌ஜீத். ரேடியோ மிர்ச்சியில் வரும் 10ஆம் தேதி அதாவது நாளை பாடல்கள் வெளியிடப்படுகின்றன. வெங்கட்பிரபு, யுவன் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் அ‌‌ஜீத் பற்றி பேசுவார்கள். ஆனால் அ‌‌ஜீத் இதில் பேசப்போவதில்லை.

தல இப்படி தலைமறைவா இருக்கிறது ச‌ரியா?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.