அதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வயசு என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த இரு படங்களும் ஒரே கதை என்று ஸ்டுடியோ வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.
காதலில் விழும் இளைஞன் தனது காதலுக்காக எப்படி மிகக் கடினமான வாழவை மேற்கொள்கிறான் என்பதுதான் இந்த இரு படங்களின் கதையாம். கொஞ்சம் குணா, கொஞ்சம் காதல் கொண்டேன் சாயல் இவ்விரு படங்களில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இந்தக் கிசுகிசு இரு இயக்குனர்களின் காதுகளையும் எட்டியிருக்கிறது. சொந்தமா யோசிச்சு எழுதிய ஸ்கிரிப்ட், அதனால எதைப் பற்றியும் கவலையில்லை என்று காரியத்தில் இருவரும் கண்ணாயிருக்கிறார்கள்.
இது... இந்த கான்ஃபிடெண்ட்தான் ஒரு கலைஞனுக்கு தேவை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.