மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தற்காப்பு கலையின் கதை 7ஆம் அறிவு?

7ஆம் அறிவு படத்தின் முதல் புகைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. புத்த பிக்குவைப்போலிருக்கும் சூர்யா தற்காப்பு கலைஞனைப் போல் உடம்பு முறுக்கி நிற்கும் புகைப்படங்கள் எல்லோரையும் கவர்ந்திருக்கிறது.

சீனாவில் பிரபலமாக இருக்கும் தற்காப்புக் கலை அவர்களுடையது அல்ல, புத்த பிக்குகள் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு கொண்டு சென்றது... இதுவே 7ஆம் அறிவு படத்தின் கதை என்று கூறப்படுகிறது. புத்த பிக்கு, சர்க்கஸ் சாகஸக்காரர், விஞ்ஞானி என சூர்யாவுக்கு இதில் பல்வேறு வேடங்கள். புத்த பிக்கு கதாபாத்திரம் படத்தில் சிறிது நேரமே வருகிறது.

ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயா‌ரித்துள்ளது. இந்த மாதம் நேரு உள்விளையாட்டரங்கில் இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.