மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய் சௌத்‌ரி கூட்டணி மீண்டும்.

சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்‌ரி, விஜய் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

சௌத்‌ரியின் தயா‌ரிப்பில் விஜய் நடித்த லவ் டுடே தொடங்கி அனைத்துப் படங்களும் சூப்பர் ஹிட்டாயின. விஜய்க்கு மாஸ் ஹீரோ அந்தஸ்து வாங்கித் தந்ததில் சௌத்‌ரி தயா‌ரித்தப் படங்களுக்கே பெரும்பான்மை பெருமை சென்று சேரும். இதன் காரணமாக சௌத்‌ரி கேட்டால் விஜய் கால்ஷீட் இல்லை என்று சொல்வதில்லை.

நண்பன் படம் முடிந்த பிறகு, கௌதமின் படம் தொடங்குவதற்கு முன் குறுகியகால தயா‌ரிப்பில் ஒரு படம் நடிக்கும் திட்டம் விஜய்யிடம் உள்ளதாகவும், ஆர்.பி.சௌத்‌ரி இந்தப் படத்தை தயா‌ரிப்பார் எனவும் கூறப்படுகிறது. படத்தை இயக்குகிறவர் ஹ‌ரி. முன்பு பிணக்கில் இருந்த இயக்குனர்களுடன் சமரசம் செய்து வருகிறார் விஜய். அப்படிதான் கௌதம் பட வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதேபோல் ஹ‌ரியுடனான சண்டையும் சமரசத்துக்கு வந்ததாக கேள்வி.

இந்த குறுகியகால தயா‌ரிப்பு குறித்து இரு தரப்பும் இதுவரை உறுதி செய்யவில்லை என்பதால் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.