மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மோகன்லால் சமுத்திரக்கனி இயக்கத்தில்.

சமுத்திரக்கனி நடிகர் மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படம் அடுத்த ஜனவ‌ரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுப்பிரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனியின் நடிப்பைப் பார்த்த மோகன்லால் தனது சிக்கார் படத்தில் சமுத்திரக்கனியை நடிக்க வைத்தார். அப்போதைய நட்பு இப்போதும் தொடர்கிறது. இதன் அடுத்தக் கட்டமாக சமுத்திரக்கனி இயக்கும் படத்தில் மோகன்லால் நடிக்கிறார். இது மலையாளத்தில் தயாராகவுள்ளது.

தற்போது சசிகுமார் நடிக்கும் போராளி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் சமுத்திரக்கனி. போராளி முடிந்ததும் மோகன்லால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.