வேலாயுதம் படத்தின் ஆடியோ நேற்று மதுரையில் வெளியிடப்பட்டது. விஜய் ரசிகர்களில் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை வைத்து ஆடியோவை வெளியிட்டனர்.
மதுரை கே.புதூரில் உள்ள சி.எஸ்.ஐ. மைதானத்தில் நேற்றிரவு விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் நற்பணிகள் வழங்கும் விழா நடந்தது. தையல் மெஷின், பசு மாடு, கல்வி உதவித் தொகை என ஏராளமான உதவிகளை விஜய் வழங்கினார். இதே விழாவில் அவரின் வேலாயுதம் படத்தின் ஆடியோவும் வெளியிடப்பட்டது. இதற்காக விஜய்யின் ரசிகர் ஒருவரும், ரசிகை ஒருவரும் தேர்வு செய்யப்பட்டனர். ரசிகை ஆடியோவை வெளியிட ரசிகர் பெற்றுக் கொண்டார்.
விழாவில் வேலாயுதம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இயக்குனர் ஜெயம் ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், பாடலாசிரியர்கள் விவேகா, அண்ணாமலை, பட அதிபர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
karmam karmam
ReplyDelete