ஒரு குவாட்டர் சொல்லு மச்சி என்று ராயபுரம் எஃபெக்டில் சுற்றிக் கொண்டிருந்த ஜீவாவை ஷங்கரும், கௌதமும் மீண்டும் கல்லூரிக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
ஷங்கரின் நண்பன் படத்தில் விஜய், ஸ்ரீகாந்துடன் ஜீவா நடிக்கிறார். கதைப்படி மூவரும் கல்லூரி மாணவர்கள். இந்த கதாபாத்திரத்துக்காக மீசை தாடியை தியாகம் செய்திருக்கிறார், அவ்வளவுதான். மற்றபடி அதே உடம்பு, அதே மசில்.
கௌதமுக்கு இது போதவில்லை. அப்படியே கல்லூரி மாணவனாக மாற வேண்டும். எடை குறைந்தால் நல்லாயிருக்கும் என்றிருக்கிறார். இதனால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார் ஜீவா. இது ஒரு லோக்கல் காதல் கதை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.