
ஒஸ்தி, போடா போடி, வேட்டை மன்னன் என்று மூன்று படங்களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. மூன்றும் அதனதன் அளவில் வளர்ந்து வருவது ஆச்சரியம்.
சிம்புவை சந்திக்கும் போது ரசிகர்களானாலும், பத்திரிகையாளர்களானாலும் கேட்கும் இரண்டாவது கேள்வி, கெட்டவன் என்ன ஆனது. கெட்டவன் சிம்பு இயக்கி நடிப்பதாக அறிவித்த படம். விளம்பரம்கூட வெளிவந்தது.
ரொம்ப நாளாக இந்தக் கேள்வியை எதிர்கொண்டு வருகிறேன். அடுத்த வருடம் கெட்டவனை தொடங்கலாம் என்று இருக்கிறேன் என கேள்விக்கு பதிலை தந்திருக்கிறார். கெட்டவனை சிம்பு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்போதைக்கு இந்த இரு விஷயங்கள் மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.