தெயவத்திருமகள் வெளியான இரண்டாவது வாரமே வெற்றி விழா கொண்டாட்டங்கள் தொடங்கின. படம் சூப்பர்ஹிட் என விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் தெரிவித்தனர்.
அதற்கேற்ப சென்னையில் மட்டும் ஐந்து கோடிக்கு மேல் இதுவரை வசூலித்துள்ளது படம். ஏழு கோடியை வசூல் தாண்ட வாய்ப்புள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம் சென்னை புறநகரில் உள்ள திரையரங்குகள் காற்று வாங்குகின்றன. பி,சி சென்டர்களிலும் கூட்டமில்லை. பல லட்சம் நஷ்டம் ஏற்படும் என்ற அச்சத்தில் பல திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளனர்.
நிலைமை இப்படியிருக்க வெந்த புண்ணில் வெங்காயத்தை தடவுவது போல் வெற்றிவிழா நடத்தலாமா என்று குமுறுகிறார்கள். இது கோபமாக வெடிக்கவும் வாய்ப்புள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.